சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

நடிகை  ஜியாகான் தற்கொலை வழக்கில் சூரஜ் பஞ்சோலிக்கு 13 ம் தேதிவரை போலீஸ் காவல்

நடிகை  ஜியா கான் கடந்த 4-ம் தேதி மும்பையில் உள்ள தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். ஜியாவின் தற்கொலைக்கு காரணம் அவரது காதலர் சூரஜ் பஞ்சோலிதான் என

Updated On :11 ஜூன் 2013, 8:07 pm

நடிகை  ஜியா கான் கடந்த 4-ம் தேதி மும்பையில் உள்ள தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். ஜியாவின் தற்கொலைக்கு காரணம் அவரது காதலர் சூரஜ் பஞ்சோலிதான் என தெரிய வந்துள்ளது. இதையடுத்து சூரஜ் பஞ்சோலியை மும்பை போலீஸார் நேற்று கைது செய்தனர். மும்பை நீதிமன்றத்தில் இன்று  ஆஜர்படுத்தப்பட்ட சூரஜை மும்பை போலீஸார் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரினர் இதை தொடர்ந்து சூரஜிடம் விசாரணை நடத்த  13 ம் தேதிவரை போலீஸ் காவல் வழங்கி உத்தரவிடபட்டது.